Testo Aatha Nee - DƏVA
Testo della canzone Aatha Nee (DƏVA), tratta dall'album Pandi (Original Motion Picture Soundtrack)
ஆத்தா நீ இல்லைனா ஆதரிக்க யார் இருக்கா?
புது சேலை வாங்கி வந்தேன் உன்ன பொதச்ச இடம் பார்ப்பதற்கா?
எத்தனை பிறவியோ இனி உன் முகத்தில் நான் முழிக்க?
எங்க போய் தேடுவேன் அம்மா பட்ட கடன நான் அடைக்க?
நான் கண்ட கனவுல நந்தவனம் எரிஞ்சது
அந்த வனம் நீ என்று அப்புறமா தெரிஞ்சது
நான் கண்ட கனவுல நந்தவனம் எரிஞ்சது
அந்த வனம் நீ என்று அப்புறமா தெரிஞ்சது
கஷ்டபட்ட காலத்திலும் கலகலன்னு சிரிச்ச
கண்டாங்கி சேலையில என் கண்ணீர தொடச்ச
ஆத்தா நீ இல்லைனா ஆதரிக்க யார் இருக்கா?
புது சேலை வாங்கி வந்தேன் உன்ன பொதச்ச இடம் பார்ப்பதற்கா?
எத்தனை பிறவியோ இனி உன் முகத்தில் நான் முழிக்க?
எங்க போய் தேடுவேன் அம்மா பட்ட கடன நான் அடைக்க?
கடைசி மூச்சு நிக்குறப்போ என்ன தாயீ நெனச்ச
கலங்கிடுவான் பிள்ளையினா சாவக்கூட மறைச்ச
கடைசி மூச்சு நிக்குறப்போ என்ன தாயீ நெனச்ச
கலங்கிடுவான் பிள்ளையினா சாவக்கூட மறைச்ச
திருநீறு பூசின கை திருநீறா ஆனதோ
திருநீறு பூசின கை திருநீறா ஆனதோ
திரும்பி வந்து பாக்குறப்போ
தெய்வம் எங்கு போனதோ?
என்ன போல பாவி யாரும் இங்க வந்து பொறக்கல
என்ன போல பாவி யாரும் இங்க வந்து பொறக்கல
கொல்லி வைக்கும் கொடுப்பினையும் எனக்கு இங்கே கெடைக்கல
என் கன்னத்தில விழுந்த கண்ணீர் கடவுள் மேல விழட்டும்
என் கன்னத்தில விழுந்த கண்ணீர் கடவுள் மேல விழட்டும்
அம்மா இல்லா கடவுள் அப்போ அம்மானுதான் அழட்டும்
என் கன்னத்தில விழுந்த கண்ணீர் கடவுள் மேல விழட்டும்
கன்னத்தில விழுந்த கண்ணீர் கடவுள் மேல விழட்டும்
அம்மா இல்லா கடவுள் அப்போ அம்மானுதான் அழட்டும்
அம்மா இல்லா கடவுள் அப்போ அம்மானுதான் அழட்டும்
என் கன்னத்தில விழுந்த கண்ணீர் கடவுள் மேல விழட்டும்
அம்மா இல்லா கடவுள் அப்போ அம்மானுதான் அழட்டும்
ஆரிராரிராரி-ராரிராரி, ஆரிராரிரோ
ஆரிராரிராரி-ராரிராரி, ஆரிராரிரோ
ஆரிராராரோ ஆரிராரிரோ
ஆரிராராரோ ஆரிராரிரோ
ஆரிராராரோ ஆரிராரிரோ
ஆரிராராரோ ஆரிராரிரோ
Credits
Writer(s): Srikanth Deva
Lyrics powered by www.musixmatch.com
Link
Disclaimer:
i testi sono forniti da Musixmatch.
Per richieste di variazioni o rimozioni è possibile contattare
direttamente Musixmatch nel caso tu sia
un artista o
un publisher.