Testo Velai Ilathavan - Mano
Testo della canzone Velai Ilathavan (Mano), tratta dall'album Velaikkaran
வேல இல்லாதவன் தான்
வேல தெரிஞ்சவன் தான்
வீரமான வேலக்காரன்
வெவகாரமான வேலக்காரன் ஹே
வேல இல்லாதவன் தான்
வேல தெரிஞ்சவன் தான்
வீரமான வேலைக்காரன்
வெவகாரமான வேலக்காரன்
ஏ மொத்தமாக வந்தா
அத சுத்தமாக முடிப்பேன்
வெறும் சத்தம் போட வேண்டாம்
அட ஒத்தைக்கு ஒத்தை வாடா
வேல இல்லாதவன் தான்
வேல தெரிஞ்சவன் தான்
வீரமான வேலக்காரன்
வெவகாரமான வேலக்காரன்
படிச்சா போதுமுன்னு நினைக்காதப்பா
இங்கே படிச்சிப்புட்டு பட்டம் விட்டா பறக்காதப்பா
எதிர்த்து பட்டம் விட்டா அறுப்பேணுப்பா
வந்த எவனோடும் மல்லுக்கட்டி ஜெயிப்பேனப்பா
காலம் நம்ம கையில இருக்குது
கவலைகள் ஏதும் கிடையாது
ஏழை எங்க வாழ்க்கைய யாரும்
ஏலம் போடா முடியாது
படிச்சவங்க வாங்குற பட்டமும்
காகிதம்தான் காகிதம்தான்
படிக்காதவன் விடுற பட்டமும்
காகிதம்தான் காகிதம்தான்
புத்தகம் உள்ளது பையில அங்கே
வித்தைகள் உள்ளது கையில இங்கே
நான் படிப்பது மனுஷனத்தாண்டா
வேல இல்லாதவன் தான்
வேல தெரிஞ்சவன் தான்
வீரமான வேலக்காரன்
வெவகாரமான வேலக்காரன்
ஏ மொத்தமாக வந்தா
அத சுத்தமாக முடிப்பேன்
வெறும் சத்தம் போட வேண்டாம்
அட ஒத்தைக்கு ஒத்தை வாடா
வேல இல்லாதவன் தான்
வேல தெரிஞ்சவன் தான்
வீரமான வேலக்காரன்
வெவகாரமான வேலக்காரன்
வெவரம் இல்லையின்னு சிரிக்காதப்பா
சிறு விளையாட்டுப் பிள்ளையின்னு நினைக்காதப்பா
பிறப்பே அப்பா அம்மா விளையாட்டப்பா
இந்த பெரியவங்க செய்வதெல்லாம் சரியா தப்பா
கண்ணா மூச்சி ஆட்டம் நடக்குது
காணாம போச்சு நம் தேசம்
மேடை போட்டு தேடும் தலைவரை
பாருங்க எல்லாம் பொய் வேஷம்
ஆறோடுற ஓட்டத்தைப் பார்
ஓட்டத்தைப் பார் ஓட்டத்தைப் பார்
அதுதானே சுதந்திரண்டா
சுதந்திரண்டா சுதந்திரண்டா
வந்த சுதந்திரம் போனது எங்கே
சட்டமும் பட்டமும் விக்கிது இங்கே
விக்கிற வாங்குற வேலை எனக்கேண்டா
வேல இல்லாதவன் தான்
வேல தெரிஞ்சவன் தான்
வீரமான வேலக்காரன்
வெவகாரமான வேலக்காரன் ஹே
வேல இல்லாதவன் தான்
வேல தெரிஞ்சவன் தான்
வீரமான வேலக்காரன்
வெவகாரமான வேலக்காரன்
ஒய் மொத்தமாக வந்தா
அத சுத்தமாக முடிப்பேன்
வெறும் சத்தம் போட வேண்டாம்
அட ஒத்தைக்கு ஒத்தை வாடா
வேல இல்லாதவன் தான்
வேல தெரிஞ்சவன் தான்
வீரமான வேலக்காரன்
வெவகாரமான வேலக்காரன்
Credits
Writer(s): Ilaiyaraaja, Mohamed Methar M
Lyrics powered by www.musixmatch.com
Link
Disclaimer:
i testi sono forniti da Musixmatch.
Per richieste di variazioni o rimozioni è possibile contattare
direttamente Musixmatch nel caso tu sia
un artista o
un publisher.