Testo Pathinettu Vayasil - Udit Narayan, Sadhana Sargam
Testo della canzone Pathinettu Vayasil (Udit Narayan, Sadhana Sargam), tratta dall'album Villain (Original Motion Picture Soundtrack)
பதினெட்டு வயசில் என்ன பிடிக்கும்
பைத்தியத்தை தவிர என்ன பிடிக்கும்
உத்து உத்து ரசித்தால் கொஞ்சம் பிடிக்கும்
ஓர கண்ணில் ரசித்தால் ரொம்ப பிடிக்கும்
தோப்புக்குள் குயிலின் சத்தம் தோட்டத்தில் குருவி சத்தம்
கன்னிப்பெண் காதுக்கு தான் எது பிடிக்கும்
வாய்வைத்து வாயை மூட வாய்பேசா பெண்ணுக்காக
வாதாடும் வளவி சத்தம் அது பிடிக்கும்
ஹே பதினெட்டு வயசில் என்ன பிடிக்கும்
பைத்தியத்தை தவிர என்ன பிடிக்கும்
யாஹி யாஹி யாஹி யாஹி...
ஆஹா ஹா ஹா ஆ... ஆஹா ஹா ஹா ஆ...
மார்கழி மாதத்தில் குளிர் அடித்தால்
கம்பளி போர்வையில் எது பிடிக்கும்
ஓ மார்புக்குள் நீ எனை மூடிக்கொண்டால்
கக்கத்தில் பாய்கின்ற வெப்பம் பிடிக்கும்
தண்ணீர் ஒரு பக்கம் உண்டு
வெந்நீர் ஒரு பக்கம் உண்டு
பெண்ணே நீராடிக்கொள்ள எது பிடிக்கும்
ஆ முத்தம் எனும் தீர்த்தும் கொண்டு
ரத்தம் அது உறையும் வண்ணம்
நித்தம் நீராட வேண்டும் அது பிடிக்கும்
தித்திக்கும் உதட்டில் தீ பிடிக்கும்
ஹே பதினெட்டு வயசில் என்ன பிடிக்கும்
பைத்தியத்தை தவிர என்ன பிடிக்கும்
உத்து உத்து ரசித்தால் கொஞ்சம் பிடிக்கும்
ஓர கண்ணில் ரசித்தால் ரொம்ப பிடிக்கும்
தாயோடு தங்கையும் துணை இருக்க
யாரோடு தூங்கிட மிக பிடிக்கும்
தாயோடு தங்கையை துரத்தி விட்டு
தலையணை கட்டிக்கொண்டு தூங்க பிடிக்கும்
பூப்போல் ஒரு தீண்டல் உண்டு
புயல் போல் ஒரு சீண்டல் உண்டு
ஏண்டி உன் தேகத்துக்கு எது பிடிக்கும்
பூப்போல் ஒரு தீண்டல் தீண்டி
புயல் போல் எனை சீண்டி சீண்டி
புதிதாய் ஒரு வித்தை காட்டு அது பிடிக்கும்
பெண்ணுக்குள் பேரின்பம் வேர் பிடிக்கும்
ஹே பதினெட்டு வயசில் என்ன பிடிக்கும்
பைத்தியத்தை தவிர என்ன பிடிக்கும்
உத்து உத்து ரசித்தால் கொஞ்சம் பிடிக்கும்
ஓர கண்ணில் ரசித்தால் ரொம்ப பிடிக்கும்
தோப்புக்குள் குயிலின் சத்தம் தோட்டத்தில் குருவி சத்தம்
கன்னிப்பெண் காதுக்கு தான் எது பிடிக்கும்
வாய்வைத்து வாயை மூட வாய்பேசா பெண்ணுக்காக
வாதாடும் வளவி சத்தம் அது பிடிக்கும்
Credits
Writer(s): R. Vairamuthu, Dhina
Lyrics powered by www.musixmatch.com
Link
Disclaimer:
i testi sono forniti da Musixmatch.
Per richieste di variazioni o rimozioni è possibile contattare
direttamente Musixmatch nel caso tu sia
un artista o
un publisher.