Testo Pachchai Thee - Karthik feat. Damini
Testo della canzone Pachchai Thee (Karthik feat. Damini), tratta dall'album Baahubali - The Beginning
பச்சைத் தீ நீயடா
கச்சைப் பூ நானடா
ஒற்றைப் பார்வை கொண்டே
பற்றிக் கொண்டாயடா
வெற்றுக் கல் நானடா
வெட்டும் உளி நீயடா
அற்பப் பாறை என்னில்
சிற்பம் செய்தாயடா
நீயே மண் மின்னும் வெண்தாரகை
உள்ளங்கை சேர்ந்தப் பூங்காரிகை
கைகள் நாம் கோர்க்கச் சிறகாகுமே
புது வானங்கள் உருவாகுமே
பச்சைத் தீ நீயடா
கச்சைப் பூ நானடா
ஒற்றைப் பார்வை கொண்டே
பற்றிக் கொண்டாயடா
மான் விழிக்குள் எந்தன்
வாழ்வொன்றைக் காண
மாமலை ஒன்றேறி வந்தேனடி
இதயம் ஒன்று உள்ளதென்று
உன் அணைப்பாலே கண்டேனே
இன்னும் எனை இறுக்கியே
அணைத்திடத் துடித்தேனே
நீயே மண் மின்னும் வெண்தாரகை
தோளில் வீழ்கின்ற பூங்காரிகை
உந்தன் தோளோடு தோள் சேர்க்கிறேன்
என்னில் தோகைகள் நான் பார்க்கிறேன்
பச்சைத் தீ நீயடா
கச்சைப் பூ நானடா
ஒற்றைப் பார்வை கொண்டே
பற்றிக் கொண்டாயடா
கீறலில் உண்டாகும்
கீதங்கள் கேட்டாய்
மோதலின் மோகங்கள் கேட்டாயடி
பிறவி பல
எடுத்தாலும்
நிகழும் கணம் நான் மறவேனே
வலிகளை வரமென தந்திடக் கேட்டேனே
நீயே மண் மின்னும் வெண்தாரகை
கண்ணில் தேன் சிந்தும் பூங்காரிகை
உந்தன் நெஞ்சுக்குள் நான் நீந்தினேன்
காதல் ஆழத்தை நான் காண்கிறேன்
பச்சைத் தீ நீயடா
கச்சைப் பூ நானடா
ஒற்றைப் பார்வை கொண்டே
பற்றிக் கொண்டாயடா
வெற்றுக் கல் நானடா
வெட்டும் உளி நீயடா
அற்பப் பாறை என்னில்
சிற்பம் செய்தாயடா
Credits
Writer(s): M. M. Keeravaani, Karky
Lyrics powered by www.musixmatch.com
Link
Disclaimer:
i testi sono forniti da Musixmatch.
Per richieste di variazioni o rimozioni è possibile contattare
direttamente Musixmatch nel caso tu sia
un artista o
un publisher.