Testo Oru Naal Oru Kanavuu - K. J. Yesudas
Testo della canzone Oru Naal Oru Kanavuu (K. J. Yesudas), tratta dall'album Best of K.J.Yesudas
ஒரு நாள் ஒரு கனவு அதை நான் மறக்கவும் முடியாது
நிஜமாய் இனிக்கிறது இது போல் கனவொன்று கிடையாது
ஒரு நாள் ஒரு கனவு அதை நான் மறக்கவும் முடியாது
நிஜமாய் இனிக்கிறது இது போல் கனவொன்று கிடையாது
வானவில்லில் நடந்து சென்று
சிரித்திருக்கும் நட்சத்திர பூ பறித்தோம்
வெள்ளி பிறை படகெடுத்து
ஆகாய கங்கை அலைகளில் துள்ளி குதித்தோம் நீச்சலடித்திட
ஒரு நாள் ஒரு கனவு அதை நான் மறக்கவும் முடியாது
நிஜமாய் இனிக்கிறது இது போல் கனவொன்று கிடையாது
நதியோரம் நதியோரம் என்னை சுற்றி பறந்தது கிளி கூட்டம்
கிளிகூட்டம் கிளிகூட்டம் வந்ததேனில் நீயொரு பழத்தோட்டம்
பறக்கும் கிளிகளிலே ஒரு கிளி உன்னை போல் உருவெடுக்க
கிளியே உனக்காக நானும் கிளி போல் அவதரிக்க
ரெக்கைகள் கொண்டு வா விண்ணிலே பறப்போம்
உள்ளங்கள் கலப்போம் வண்ணம் சூடும் வண்ணகிளி
ஒரு நாள் ஒரு கனவு அதை நான் மறக்கவும் முடியாது
நிஜமாய் இனிக்கிறது இது போல் கனவொன்று கிடையாது
எதனாலே வெண்ணிலவே அவள் போல் நீயும் இளைத்தாயோ
உன் மனதை உன் மனதை எனைப்போல் எவருக்கும் கொடுத்தாயோ ஹோ
ஒளி விடும் முகத்தினிலே கறை ஏன் முத்த அடையாளங்களோ
இரவில் விழித்திருந்து நீ தான் கற்றதென்ன பாடங்களோ
மின்னிடும் கண்ணிலே என்னவோ உள்ளதே
சொல்லம்மா சொல்லம்மா நெஞ்சில் ஆடும் மின்னல் கொடி
ஒரு நாள் ஒரு கனவு அதை நான் மறக்கவும் முடியாது
நிஜமாய் இனிக்கிறது இது போல் கனவொன்று கிடையாது
வானவில்லில் நடந்து சென்று
சிரித்திருக்கும் நட்சத்திர பூ பறிப்போம்
வெள்ளி பிறை படகெடுத்து
ஆகாய கங்கை அலைகளில் துள்ளி குதித்தோம் நீச்சலடித்திட
ஒரு நாள் ஒரு கனவு அதை நான் மறக்கவும் முடியாது
நிஜமாய் இனிக்கிறது இது போல் கனவொன்று கிடையாது
Credits
Writer(s): Ilaiyaraaja, Palaniappan Bharathi
Lyrics powered by www.musixmatch.com
Link
Disclaimer:
i testi sono forniti da Musixmatch.
Per richieste di variazioni o rimozioni è possibile contattare
direttamente Musixmatch nel caso tu sia
un artista o
un publisher.