Testo Moopilla Thamizhe Thaaye - A.R. Rahman
Testo della canzone Moopilla Thamizhe Thaaye (A.R. Rahman), tratta dall'album Moopilla Thamizhe Thaaye - Single
புயல் தாண்டியே விடியல்
புதுவானில் விடியல்
பூபாளமே தமிழே வா
தரணியாள தமிழே வா
விழுந்தோம் முன்னம் நாம்
எழுந்தோம் எப்போதும்
பிரிந்தோம் முன்னம் நாம்
இணைந்தோம் எப்போதும்
திசை எட்டும் தமிழே எட்டும்
தித்தித்தும் முரசும் கொட்டும்
மதிநுட்பம் வானை முட்டும்
மழை முத்தாய் கடலில் சொட்டும்
திசை எட்டும் தமிழே எட்டும்
தித்தித்தும் முரசும் கொட்டும்
மதிநுட்பம் வானை முட்டும்
மழை முத்தாய் கடலில் சொட்டும்
அகம் என்றால் அன்பாய் கொஞ்சும்
புறம் என்றல் போராய் பொங்கும்
தடையின்றி காற்றில் எங்கும்
தமிழ் என்று சங்கே முழங்கும்
தடையின்றி காற்றில் எங்கும்
தமிழ் என்று சங்கே முழங்கும்
உறங்காத பிள்ளைக்கெல்லாம்
தாலாட்டாய் தமிழே கரையும்
பசியென்று யாரும் வந்தால்
பாலாகி அமுதம் பொழியும்
கொடைவள்ளல் எழுவர் வந்தார்
கொடை என்றால் உயிரும் தந்தார்
படை கொண்டு பகைவர் வந்தார்
பல பாடம் கற்றுச் சென்றார்
மூவேந்தர் சபையில் நின்று
முத்தமிழின் புலவர் வென்றார்
பாவேந்தர் என்றே கண்டார்
பாராளும் மன்னர் பணிந்தார்
அன்னைக்கும் அன்னை நீயே
அடிவானில் உதயம் நீயே
முன்னைக்கும் முன்னை நீயே
மூப்பில்லா தமிழே தாயே
அன்னைக்கும் அன்னை நீயே
அடிவானில் உதயம் நீயே
முன்னைக்கும் முன்னை நீயே
மூப்பில்லா தமிழே தாயே
மூப்பில்லா தமிழே தாயே
மூப்பில்லா தமிழே தாயே
மூப்பில்லா தமிழே தாயே
மூப்பில்லா தமிழே தாயே
மூப்பில்லா தமிழே தாயே
உதிர்ந்தோம் முன்னம் நாம்
மலர்ந்தோம் எப்போதும்
கிடந்தோம் முன்னம் நாம்
கிளைத்தோம் எப்போதும்
தணிந்தோம் முன்னம் நாம்
எரிந்தோம் எப்போதும்
தொலைந்தோம் முன்னம் நாம்
பிணைந்தோம் எப்போதும்
விழுந்தோம் முன்னம் நாம்
எழுந்தோம் எப்போதும்
அன்னைக்கும் அன்னை நீயே
அடிவானில் உதயம் நீயே
முன்னைக்கும் முன்னை நீயே
மூப்பில்லா தமிழே தாயே
மூப்பில்லா தமிழே தாயே
மூப்பில்லா தமிழே தாயே
மூப்பில்லா தமிழே தாயே
தமிழென்றால் மூவகை என்றே
ஆண்டாண்டாய் அறிந்தோம் அன்று
இயல் நாடகம் இசையும் சேர்ந்தால்
மனம் கொள்ளை கொள்ளும் என்று
காலங்கள் போகும்போது
மொழி சேர்ந்து முன்னால் போனால்
அழிவின்றி தொடரும் என்றும்
அமுதாகி பொழியும் எங்கும்
விஞ்ஞானத் தமிழாய் ஒன்று
வணிகத்தின் தமிழாய் ஒன்று
இணையத்தில் ஊடல் கொண்டு
நிறையும் தமிழ் உலகப் பந்து
மொழியேற்று முன்னே வந்தோம்
தட்டச்சில் தனியே நின்றோம்
கணினிக்கும் பொருந்தி கொண்டோம்
கலைக்கேற்ப மாறிக் கொண்டோம்
தொழில்நுட்ப கவனம் கொண்டோம்
மொழி வாங்கி மாறிச் செல்வோம்
பின்வாங்கும் பேச்சே இல்லை
முன்னோக்கி சென்றே வெல்வோம்
புதுநுட்பம் என்றே எதுவும்
கால் வைக்கும் முன்னே தமிழும்
ஆயத்தம் கொள்ளும் அழகாய்
ஆடைகள் அணியும் எளிதாய்
எங்கேயும் சோடை போகா
என் அருமை தமிழே வா வா
வருங்காலப் பிள்ளைகள் வாழ்வும்
வளம் பொங்க வா வா வா வா
அன்னைக்கும் அன்னை நீயே
அடிவானில் உதயம் நீயே
முன்னைக்கும் முன்னை நீயே
மூப்பில்லா தமிழே தாயே
பழங்காலப் பெருமை பேசி
படிதாண்டா வண்ணம் பூசி
சிறை வைக்கப் பார்ப்பார் தமிழே
நீ சீறி வா வா வெளியே
வாய் சொல்லில் வீரர் எல்லாம்
வடிகட்டப்படுவார் வீட்டில்
சொல்லுக்குள் சிறந்தது என்றால்
செயல் என்றே சொல் சொல் சொல் சொல்
சென்றிடுவோம் எட்டுத்திசைக்கும்
அயல்நாட்டுப் பல்கலைப் பக்கம்
இரு கைகள் தமிழுக்கமைப்போம்
ஊர் கூடித் தேரை இழுப்போம்
மொழியில்லை என்றால் இங்கே
இடமில்லை என்றே அறிவாய்
விழித்துக்கொள் தமிழா முன்னே
இணைத்துக்கொள் தமிழால் உன்னை
தமிழ் எந்தன் உயிரே என்று
தினம்தோறும் சொல்வோம் இன்று
மொழியின்றி யாரைக் கொன்று
உயர்வோமா உலகில் இன்று
அன்னைக்கும் அன்னை நீயே
அடிவானில் உதயம் நீயே
முன்னைக்கும் முன்னை நீயே
மூப்பில்லா தமிழே தாயே
அன்னைக்கும் அன்னை நீயே
அடிவானில் உதயம் நீயே
முன்னைக்கும் முன்னை நீயே
மூப்பில்லா தமிழே தாயே
மூப்பில்லா தமிழே தாயே
மூப்பில்லா தமிழே தாயே
மூப்பில்லா தமிழே தாயே
மூப்பில்லா தமிழே தாயே
மூப்பில்லா தமிழே தாயே
புயல் தாண்டியே விடியல்
புதுவானில் விடியல்
பூபாளமே வா தமிழே வா (தமிழே வா)
தரணியாள தமிழே வா
(தரணியாள தமிழே வா)
தமிழே வா (தமிழே வா)
தரணியாள தமிழே வா
(தரணியாள தமிழே வா)
Credits
Writer(s): A. R. Rahman, A.r. Rahman, Thamarai
Lyrics powered by www.musixmatch.com
Link
Disclaimer:
i testi sono forniti da Musixmatch.
Per richieste di variazioni o rimozioni è possibile contattare
direttamente Musixmatch nel caso tu sia
un artista o
un publisher.