Testo Kanja Poovu Kannala - Yuvan Shankar Raja feat. Sid Sriram
Testo della canzone Kanja Poovu Kannala (Yuvan Shankar Raja feat. Sid Sriram), tratta dall'album Kanja Poovu Kannala (From "Viruman") - Single
கஞ்சா பூவு கண்ணால
செப்பு செலை உன்னால
இடுப்பு வேட்டி அவுருதடி
நீ சிரிச்சா தன்னால
கஞ்சா பூவு கண்ணால
செப்பு செலை உன்னால
இடுப்பு வேட்டி அவுருதடி
நீ சிரிச்சா தன்னால
ஒன் தட்டாங்காயி பல்லால
நீ சொன்ன ஒத்த சொல்லால
சூரியனையும் ஒடைப்பேன்டி
கவட்டை எடுத்து கல்லால
கருப்பட்டி கரைச்சு செஞ்சு வச்ச செலையா
பச்சரிசி போட்ட பொங்கப்பானை ஒலையா
கருப்பட்டி கரைச்சு செஞ்சு வச்ச செலையா
பச்சரிசி போட்ட பொங்கப்பானை ஒலையா
ஈரக்கொலைய சொரண்டி என்ன
கொல்லுறாயே கொலையா
ஈரக்கொலைய சொரண்டி என்ன
கொல்லுறாயே கொலையா
கஞ்சா பூவு கண்ணால
செப்பு செலை உன்னால
இடுப்பு வேட்டி அவுருதடி
நீ சிரிச்சா தன்னால
அந்தி நடுச்சாமம் எழுப்பி
அந்த நட்சத்திரம் உலுப்பி
ஒன் மூக்குல காதுல தோடா
மாட்டி தொங்க விடப் போறேன்
அந்த ராத்திரிய கிள்ளி
கொஞ்சம் கருத்த மேகம் அள்ளி
ஒன் இமைய பூசும் கண்ணு மையா
மாத்திக்கொண்டு நானும் வாரேன்
மாடு குத்தி கிழிச்சாலும் பொழச்சுக்குவேன்டி
ஒன் புருவக்கத்தி குத்திப்புட்டா என்ன செய்யுவேன்டி
சூரிக்கத்தி வீசுனாலும் நிமிந்து நிப்பேன்டி
ஒன் சுண்டு விரல் பட்டு போனா சுணங்கி போவேன்டி
நீ மனசு வெச்சா மந்தக் கல்லையும்
திண்டு செமிப்பேன்டி
நீ மனசு வெச்சா மந்தக் கல்லையும்
திண்டு செமிப்பேன்டி
கஞ்சா பூவு கண்ணால
செப்பு செலை உன்னால
இடுப்பு வேட்டி அவுருதடி
நீ சிரிச்சா தன்னால
ஒன் தட்டாங்காயி பல்லால
நீ சொன்ன ஒத்த சொல்லால
சூரியனையும் ஒடைப்பேன்டி
கவட்டை எடுத்து கல்லால
Credits
Writer(s): Shankar Raja Yuvan, Manimaran Karumathur
Lyrics powered by www.musixmatch.com
Link
Disclaimer:
i testi sono forniti da Musixmatch.
Per richieste di variazioni o rimozioni è possibile contattare
direttamente Musixmatch nel caso tu sia
un artista o
un publisher.