Testo Indiane Vaa - A.R. Rahman
Testo della canzone Indiane Vaa (A.R. Rahman), tratta dall'album Lingaa (Original Motion Picture Soundtrack)
இந்தியனே வா, புது இமயத்தை உண்டாக்க வா
இளையவனே வா, மழை தண்ணீரில் பொன் செய்வோம் வா
துளிகள் கூடி ஆறாகும் நீ வரலாற்று துளியாக வா
வலியவனே வா, உன் வலது கரம் அணையாகும் வா
இரு மலைகளை பொருத்தி நதிகளை நிறுத்தி
விஞ்ஞான கோவில் ஒன்று காட்டுவோம்
சேர்வோமா (சேர்வோமா) ஓர் ஜாதி (ஆவோமா)
சேர்வோமா (சேர்வோமா) ஓர் ஜாதி (ஆவோமா)
ஊரெல்லாம் (சேர்வோமா) உற்சாகம் (கொள்வோமா)
பட்டாளம் (காண்போமா) காண்போமா?
இந்தியனே வா, புது இமயத்தை உண்டாக்க வா
தண்ணீர் இல்லாமல் மனிதர் கிடையாது வா
மனிதர் இல்லாமல் மாற்றம் கிடையாது துளியாகி, வெளியாகி போராடு
சேர்வோமா (சேர்வோமா) ஓர் ஜாதி (ஆவோமா)
சேர்வோமா (சேர்வோமா) ஓர் ஜாதி (ஆவோமா)
விலங்கிட்ட (விலங்காக) இனிமேலும் (வாழ்வோமா)
பொற்காலம் (காண்போமா) காண்போமா?
இந்தியனே வா, புது இமயத்தை உண்டாக்க வா
வெள்ளை இருள் நீங்கி காந்தி தேசம் பேர் பெற வேண்டும்
கங்கை காவேரி தொட வேண்டும்
நம் பாலை வனத்தில் பாலை விட வேண்டும்
சேர்வோமா (சேர்வோமா) ஓர் ஜாதி (ஆவோமா)
வெல்வோமா (வெல்வோமா) விதியெல்லாம் (வெல்வோமா)
வரலாறு பார்போமா கண்ணமா-கண்ணமா
கச்சேரி காண்போமா-காண்போமா, ஓ
வரலாறு பார்போமா கண்ணமா-கண்ணமா
கச்சேரி காண்போமா-காண்போமா, ஓ
ஒன்று படு வென்று விடு
உலகில் பெரிதென்று ஏதும் இல்லை வா
பறக்கும் வானம் அது பெரியதுதானே
சிறகின் முன்னே அது சிறியதுதானே
தேசம் ஒன்றாய்ச் செய்வோமா?
சேர்வோமா (சேர்வோமா) ஓர் ஜாதி (ஆவோமா)
வெல்வோமா (வெல்வோமா) விதியெல்லாம் (வெல்வோமா)
இந்தியனே வா, புது இமயத்தை உண்டாக்க வா
இளையவனே வா, மழை தண்ணீரில் பொன் செய்வோம் வா
துளிகள் கூடி ஆறாகும் நீ வரலாற்று துளியாக வா
வலியவனே வா, உன் வலது கரம் அணையாகும் வா
இரு மலைகளை பொருத்தி நதிகளை நிறுத்தி
விஞ்ஞான கோவில் ஒன்று காட்டுவோம்
இரு மலைகளை பொருத்தி நதிகளை நிறுத்தி
விஞ்ஞான கோவில் ஒன்று காட்டுவோம்
சேர்வோமா (சேர்வோமா) ஓர் ஜாதி (ஆவோமா)
வெல்வோமா (வெல்வோமா) விதியெல்லாம் (வெல்வோமா)
மலை கட்டி வாழ்ந்தோமே, அணை கட்டி வாழ்வோமா
கொடி கட்டி ஆழ்வோமா-ஆழ்வோமா?
Credits
Writer(s): A.r. Rahman, Ramasamy Thevar Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com
Link
Disclaimer:
i testi sono forniti da Musixmatch.
Per richieste di variazioni o rimozioni è possibile contattare
direttamente Musixmatch nel caso tu sia
un artista o
un publisher.