Testo Pom Pom Penne - Yuvan Shankar Raja feat. Rahul Nambiar, Ramya NSK & Madhan Karky
Testo della canzone Pom Pom Penne (Yuvan Shankar Raja feat. Rahul Nambiar, Ramya NSK & Madhan Karky), tratta dall'album Biriyani (Original Motion Picture Soundtrack)
நெஞ்சைத் தாக்கிடும் இசையே நில்லடி
உனக்காய் தீட்டிய வரியோ நானடி
கேட்காத பாடல் ஆவோம்
கைகோர்க்க வா
கசப்பை நீக்கியே
காற்றில் தித்திப்போம் வா
பாம் பாம் பாம் பெண்ணே
பொய்க் கோபப் பெண்ணே
நீ இவனை தண்டித்தால்
இவன் உயிரை எடுப்பானே
பாம் பாம் பாம் பெண்ணே
பொய்க் கோபப் பெண்ணே
நீ இவனை மன்னித்தால்
இந்த பாட்டை முடிப்பானே
என்ன விட்டு
வேற ஒன்ன
தேடிப் போன
எந்த மூஞ்ச வெச்சுகிட்டு கெஞ்சி நிக்குற?
பூவை விட்டு பூ தாவும் வண்டு
வாசம் பத்தி ஆராய்ச்சி செய்யும்
தேன் குடிக்க உன்னைத்தான் தேடும்
யாரப் பாத்து நீயும்
இந்த கேள்வி கேக்குற?
வெக்கம் கெட்ட பூனைப் போல
பாலுக்காக வால் ஆட்டுறியே
வெக்கப்பட சொல்லித் தந்தா
நானும் கொஞ்சம் கஷ்டப்பட்டு கத்துப்பேன்
கத்துத்தர வேற பொண்ண பார்
பாம் பாம் பாம் பெண்ணே
பொய்க் கோபப் பெண்ணே
நீ இவனை தண்டித்தால்
இவன் உயிரை எடுப்பானே
பாம் பாம் பாம் பெண்ணே
பொய்க் கோபப் பெண்ணே
நீ இவனை மன்னித்தால்
இந்த பாட்டை முடிப்பானே
அந்தக் கடவுளை விட
மிக உயர்ந்தவள் எவள்?
செய்த தவறினை உணர்ந்திடும்
காதலன் நிலையினை
புரிந்திடும் ஒருத்தி அவள்
நேற்றின் வாசனை மீண்டும் காற்றிலே
நேற்றின் பாடலோ மீண்டும் காதிலே
பொன்மாலை ஒன்று மீண்டும் உண்டானதே
ஏதேதோ எண்ணம் எல்லாம்
மீண்டும் பூக்கின்றதே
பாம் பாம் பாம் நீயும்
பாம் பாம் பாம் நானும்
ஒன்றாக சேர்ந்தோமே
பூத்தூறல் நம் மேலே
பாம் பாம் பாம் நீயும்
பாம் பாம் பாம் நானும்
கை கோர்த்துக் கொண்டோமே
பிரிவில்லை இனிமேலே
Credits
Writer(s): Yuvanshankar Raja, Karky
Lyrics powered by www.musixmatch.com
Link
Disclaimer:
i testi sono forniti da Musixmatch.
Per richieste di variazioni o rimozioni è possibile contattare
direttamente Musixmatch nel caso tu sia
un artista o
un publisher.