Testo Oru Poiyavathu - Hariharan
Testo della canzone Oru Poiyavathu (Hariharan), tratta dall'album Hits of A.R.Rahman Isai Saral
ஒரு பொய்யாவது சொல் கண்ணே
உன் காதலன் நான் தான் என்று
அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்
ஒரு பொய்யாவது சொல் கண்ணே
உன் காதலன் நான் தான் என்று
அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்
பூக்களில் உன்னால் சத்தம்
அடி மௌனத்தில் உன்னால் யுத்தம்
இதைத் தாங்குமா என் நெஞ்சம்
இதைத் தாங்குமா என் நெஞ்சம்
உண்மையும் பொய்மையும் பக்கம்பக்கம்தான்
ரொம்பப் பக்கம்பக்கம்தான்
பார்த்தால் ரெண்டும் வேறுதான்
பாலுக்கும் கள்ளுக்கும் வண்ணம் ஒன்றுதான்
பார்க்கும் கண்கள் ஒன்றுதான்
உண்டால் ரெண்டும் வேறுதான்
ஒரு பொய்யாவது சொல் கண்ணே
உன் காதல் நான் தான் என்று
அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்
இரவினைத் திரட்டி
இரவினைத் திரட்டி கண்மணியின் குழல் செய்தாரோ
கண்மணியின் குழல் செய்தாரோ
நிலவின் ஒளி திரட்டிக் கண்கள் செய்தாரோ
ஓ விண்மீன் விண்மீன் கொண்டு
விரலின் நகம் சமைத்து மின்னலின் கீற்றுகள்
கொண்டு கைரேகை செய்தானோ
வாடைக் காற்று பட்டு
வயதுக்கு வந்த பூக்கள் கொண்டுத் தங்கம்
தங்கம் பூசித் தோள் செய்தானோ
ஆனால் பெண்ணே
உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ
காதல் கண்ணே
உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ
ஒரு பொய்யாவது சொல் கண்ணே
உன் காதல் நான் தான் என்று
அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்
நிலவினை எடுத்து அருகில் காட்டியது நீதானே
அருகில் காட்டியது நீதானே
மலரின் முகவரிகள் சொன்னதும் நீதானே
ஓ காற்று, பூமி, வானம் காதல் பேசும் மேகம்
அறிமுகம் செய்தது யார் யார் என் அன்பே நீதானே
கங்கை கங்கை ஆற்றைக்
கவிதைகள் கொண்டு தரும் காவிரி ஊற்றைத்
தன்னில் கையில் தந்தவள் நீதானே
ஆனால் உயிரே
நெஞ்சை மட்டும் மூடி வைத்தாயே
கானல் நீரே
நெஞ்சை மட்டும் மூடி வைத்தாயே
ஒரு பொய்யாவது சொல் கண்ணே
உன் காதல் நான் தான் என்று
அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்
ஒரு பொய்யாவது சொல் கண்ணே
உன் காதல் நான் தான் என்று
அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்
பூக்களில் உன்னால் சத்தம்
அட மௌனத்தில் உன்னால் யுத்தம்
இதைத் தாங்குமா என் நெஞ்சம்
தாங்குமா என் நெஞ்சம்
Credits
Writer(s): Vairamuthu Ramasamy Thevar, Rahman A. R.
Lyrics powered by www.musixmatch.com
Link
Disclaimer:
i testi sono forniti da Musixmatch.
Per richieste di variazioni o rimozioni è possibile contattare
direttamente Musixmatch nel caso tu sia
un artista o
un publisher.
Altre canzoni dell'album
Enge En Punnagail (From "Thaalam")
Kaadhal yogi (From "Thaalam")
Unnaithanea (From "Thaalam")
Eetchi Elumichi (From "Taj Mahal")
Kulliruthu Kulliruthu (From "Taj Mahal")
Sotta Sotta (From "Taj Mahal")
Anbae Anbae (From "Jeans")
Varayo En Thozhi (From "Jeans")
Markandeya (From "New")
Thottal Poomalarum (From "New ")