Testo Maruvaarthai - Sid Sriram
Testo della canzone Maruvaarthai (Sid Sriram), tratta dall'album The Prodigious Dhanush
மறுவார்த்தை பேசாதே மடிமீது நீ தூங்கிடு
இமை போல நான் காக்க கனவாய் நீ மாறிடு
மயில் தோகை போலே விரல் உன்னை வருடும்
மனப்பாடமாய் உரையாடல் நிகழும்
விழி நீரும் வீணாக, இமை தாண்ட கூடாதென
துளியாக நான் சேர்த்தேன், கடலாக கண்ணானதே
மறந்தாலும் நான் உன்னை நினைக்காத நாள் இல்லையே
பிரிந்தாலும் என் அன்பு ஒருபோதும் பொய் இல்லையே
விடியாத காலைகள், முடியாத மாலைகளில்
வடியாத வேர்வை துளிகள்
பிரியாத போர்வை நொடிகள்
மணி காட்டும் கடிகாரம் தரும் வாதை அறிந்தோம்
உடை மாற்றும் இடைவேளை அதன்பின்பே உணர்ந்தோம்
மறவாதே மனம் மடிந்தாலும் வரும்
முதல் நீ முடிவும் நீ
அலர் நீ, அகிலம் நீ
தொலைதூரம் சென்றாலும் தொடு வானம் என்றாலும் நீ
விழி ஓரம்தானே மறைந்தாய்
உயிரோடு முன்பே கலந்தாய்
இதழ் என்னும் மலர்கொண்டு கடிதங்கள் வரைந்தாய்
பதில் நானும் தரும்முன்பே கனவாகி கலைந்தாய்
பிடிவாதம் பிடி, சினம் தீரும் அடி
இழந்தோம் எழில்கோலம்
இனிமேல் மழைக்காலம்
மறுவார்த்தை பேசாதே மடிமீது நீ தூங்கிடு
இமை போல நான் காக்க கனவாய் நீ மாறிடு
மயில் தோகை போலே விரல் உன்னை வருடும்
மனப்பாடமாய் உரையாடல் நிகழும்
விழி நீரும் வீணாக, இமை தாண்ட கூடாதென
துளியாக நான் சேர்த்தேன், கடலாக கண்ணானதே
மறந்தாலும் நான் உன்னை நினைக்காத நாள் இல்லையே
பிரிந்தாலும் என் அன்பு ஒருபோதும் பொய் இல்லையே
மறுவார்த்தை பேசாதே மடிமீது நீ தூங்கிடு
Credits
Writer(s): Thamarai, Siva Darbuka
Lyrics powered by www.musixmatch.com
Link
Disclaimer:
i testi sono forniti da Musixmatch.
Per richieste di variazioni o rimozioni è possibile contattare
direttamente Musixmatch nel caso tu sia
un artista o
un publisher.
Altre canzoni dell'album
Hey Nijame (From "Enai Noki Paayum Thota")
Rowdy Baby (From "Maari 2")
Goindhammavaala (From "VadaChennai")
VIP Title Song (From "Velai Illa Pattadhaari")
Maalai Varum Vennila (From "Nenjam Marappathillai")
Solli Tholaiyen Ma (From "Yaakkai")
Local Sarakka Foreign Sarakka (From "Padaiveeran")
Torture Of Raghuvaran - Ucchathula (From "Velai Illa Pattadhaari 2")
Maari Gethu (From "Maari 2")