Testo Kola Kolayya - KK & Sujatha
Testo della canzone Kola Kolayya (KK & Sujatha), tratta dall'album Sweet Voice of K.K
கொலக் கொலயா, கொலக் கொலயா முந்திரிக்காலே
இந்தக் குமரிப்பொண்ணு கூட வந்தா குதிரைவாலே
அலை அலையா, அலை அலையா நீ சிரிச்சாலே
அடங்காத ஆசை வரும் உங்கொப்பன் தன்னாலே
காயாத கானகத்தே
காத்து வாங்கும் பஞ்சு மெத்தை
கண்ணடிச்சே என்னை வித்தே
எங்கக்கா பெத்த கீரைக் கொத்தே ஏ-ஏ-ஏ
கொலக் கொலயா, கொலக் கொலயா முந்திரிக்காலே
இந்தக் குமரிப்பொண்ணு கூட வந்தா குதிரைவாலே
ஹே அலை அலையா, அலை அலையா நீ சிரிச்சாலே
ஹ-ஹான் அடங்காத ஆசை வரும் உங்கொப்பன் தன்னாலே
பச்சை புடிக்கல, மஞ்சைப் புடிக்கல
வெள்ளைப் புடிக்கலியே
உன் கன்னம் தவிரவும் வேற
எனக்கொரு வண்ணம் புடிக்கலியே
கொக்கு புடிக்கல, மீனு புடிக்கல
நண்டு புடிக்கலயே
நீ கொத்த வரும் வரை ஊருக்குள்ளே
ஒரு கொத்தும் புடிக்கலயே
நீ கம்மாக்கரை நான் ஆசை நுரை
அடி பாஞ்சு வரேன் உன்னை ஒட்டும் வரை
ஏ சீமைத்துரை ஏ ஊமைத்துரை
நீ தொட்டா என்ன தொடு ஆனவரை
இடையே இடையே இஞ்சிக்கொடி
இரு கை அல்ல ஒரு கை புடி
விரலே உனக்கு ஏணிப்படி
வெட்கம் வருதே, ஏன் இப்படி
கொலக் கொலயா, கொலக் கொலயா முந்திரிக்காலே
இந்தக் குமரிப்பொண்ணு கூட வந்தா குதிரைவாலே
அலை அலையா, அலை அலையா நீ சிரிச்சாலே
அடங்காத ஆசை வரும் உங்கொப்பன் தன்னாலே
ஒன்னு கொடுத்திட ரெண்டு கொடுத்திட
மூணு கொடுத்திடவா
முத்தம் நாலு கொடுத்திட அஞ்சுக் கொடுத்திட
ஆறு கொடுத்திடவா
ஒட்டி எடுத்திட கட்டி எடுத்திட
தட்டி எடுத்திடவா
கன்னம் கிள்ளி எடுத்திட அள்ளி எடுத்திட
சொல்லி எடுத்திடவா
நீ ஆசை நடை நான் அன்ன நடை
வா ஒன்னா வைப்போம் ஒரு முத்தக்கடை
உன் ஒத்த ஜடை அது யுத்தப் படை
நீ பொண்ணே இல்லை ஒரு பொம்மைக் கடை
அணிலே அணிலே என்னாங்குற
அத்திப்பழம் வேணாங்குற
குயிலே குயிலே கூட்டத்தொற
கூட்டாஞ்சோறு ஆக்கித் தரேன்
கொலக் கொலயா, கொலக் கொலயா முந்திரிக்காலே
இந்தக் குமரிப்பொண்ணு கூட வந்தா குதிரைவாலே
அலை அலையா, அலை அலையா நீ சிரிச்சாலே
ஹே அடங்காத ஆசை வரும் உங்கொப்பன் தன்னாலே
காயாத கானகத்தே
காத்து வாங்கும் பஞ்சு மெத்தை
கண்ணடிச்சே என்னை வித்தே
எங்கக்கா பெத்த கீரைக் கொத்தே ஏ-ஏ-ஏ
Credits
Writer(s): Sagar Vidya, Vijay Pa
Lyrics powered by www.musixmatch.com
Link
Disclaimer:
i testi sono forniti da Musixmatch.
Per richieste di variazioni o rimozioni è possibile contattare
direttamente Musixmatch nel caso tu sia
un artista o
un publisher.
Altre canzoni dell'album
Ninaithu Ninaithuu (From "7/G Rainbow Colony")
Appadipodu (From "Gilli")
Deepavali Deepavali (From "Sivakasi")
Kangal Kandadhuu (From "Oru Kalluriyin Kadhai")
Nijama Nijama (From "Bose")
Kundu Kundu (From "Dhol")
Aithalakka (From "Karkaa Kasadara")
Lealakku Lealakku (From "Aathi")
Pangu Podu (From Oru Kalluriyin Kadhai)